Monday, 19 November 2012

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

இயற்றியவர் : யாழ்ப்பாணம் இணுவில் வீரமணி ஐயர்
பாடியவர் : டி. எம். சௌந்தரராஜன்
ராகம் : ஆனந்த பைரவி கல்யாணி பாகேஸ்ரீ ரஞ்சனி

(ஆனந்த பைரவி)
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா தேவி
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா தேவி
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா

பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா

நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால்
நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால்
நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ?
நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால்
நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ?
ஏனிந்த மௌளனம் அம்மா ஏழை எனக்கருள?
ஏனிந்த மௌளனம் அம்மா ஏழை எனக்கருள?
ஏனிந்த மௌளனம் அம்மா ஏழை எனக்கருள?
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா

(கல்யாணி)
எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்
எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்
நல்லாட்சி வைதிடும் நாயகியே
நல்லாட்சி வைதிடும் நாயகியே நித்ய
கல்யாணியே...
கல்யாணியே கபாலி காதல் புரியும்
கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
உல்லாசியே உமா உனை நம்பினேனம்மா
உல்லாசியே உமா உனை நம்பினேனம்மா

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா

(பாகேஸ்ரீ)
நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய்
நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய்
வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்
நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய்
வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ தாயே
பாகேஸ்ரீ தாயே பார்வதியே
பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த
லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா
லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா

(ரஞ்சனி)
அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான்
அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான்
கொஞ்சிக்குலாவிடும் வஞ்சியே நின்னிடம்
அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான்
கொஞ்சிக்குலாவிடும் வஞ்சியே நின்னிடம்
தஞ்சமென அடைந்தேன்...
தஞ்சமென அடைந்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரக்ஷிப்பாய் கெஞ்சுகிறேனம்மா

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா

Friday, 19 October 2012

ஆடி அடங்கும் வாழ்க்கையடா

  ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லைஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
 

ஆதாரம் என்றும் நீதானே

ராகம்: வாசஸ்பதி
தாளம்: ஆதி

ஆதாரம் என்றும் நீதானே
ஆறுமுகனே வள்ளியம்மை மணாளனே
- ஆதாரம்

பாதார விந்தம் பணிந்திடும் அடியார்
பவவினை அகல கண் பார்த்தருளும் குகனே
- ஆதாரம்

தீயகுணங்கள் என்னைச் சேராமல் -என்
செய்கையிலே நேர்மை தவறாமல்
ஈகை எனும் பண்பில் மாறாமல் -எந்தத்
தன்மையிலும் உன்னை மறவாமல் இருக்க
- ஆதாரம்

வினாயகனே வினை தீர்ப்பவனே

ராகம்: கீரவாணி
வினாயகனே வினை தீர்ப்பவனே
வேழமுகத்தோனே ஞால முதல்வனே

(வினாயகனே)

குணானிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்

(வினாயகனே)

உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கண நாதனே மாங்கனியை உண்டாய்
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்

(வினாயகனே)

யாமறிந்த மொழிகளிலே

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்,
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளி யுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்,
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.

Sirkali Govindarajan Songs

ராகம்: கரகரப்ரியா
தாளம்: ஆதி
பழனிமலை முருகா பழம் நீ திருக்குமரா
பழம் ஒன்று எந்தனுக்கு தா- ஞான
பழம் ஒன்று எந்தனுக்கு தா - முருகா
- பழனிமலை

இளமை நில்லாது யாக்கை நிலையாது
வளமையோ செல்வமோ நலம் ஒன்றும் தாராது
நிலமை இதுவாக தலமைப் பொருளாக
நிம்மதியை எந்தனுக்குத்தா முருகா
நிம்மதியை எந்தனுக்குத்தா
- பழனிமலை

உளநாள் ஒவ்வொன்றும் உன் திருப்புகழ் பாடி
உண்மைப் பொருளாக உந்தனையே நாடி
சில நாள் வாழ்ந்தாலும் செம்மையையே தேடி
தென்தமிழே அன்பே நீயும் நானும் கூடி
மகிழ்ந்திட வரம் ஒன்று தா -மனம்
மகிழ்ந்திட வரம் ஒன்று தா
- பழனிமலை


இராகம்: நாட்டை தாளம்: ஆதி

கணபதியே வருவாய் அருள்வாய்
(கணபதியே)
மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க
மங்கள இசை என்தன் நாவினில் உதிக்க
(கணபதியே)
ஏழு சுரங்களில் இன்னிசை பாட
எங்கணும் இன்பம் பொங்கியே ஓட
தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட
தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட
(கணபதியே)

தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க
தொனியும் மணியென க­ரென் றொலிக்க
ஊக்குக நல்லிசை உள்ளம் களிக்க
உண்மை ஞானம் செல்வம் கொழிக்க
(கணபதியே)

சேவிக்க வேண்டும் அய்யா சிதம்பரம்
சேவிக்க வேண்டும் அய்யா
-  சேவிக்க வேண்டும் அய்யா

சேவிக்கவேண்டும் சிதம்பர மூர்த்தியாம்
தேவாதி தேவன் திருச்சந்நிதி கண்டு
-  சேவிக்க வேண்டும் அய்யா

காரானை மாமுகத்து ஐந்து கரத்தானை
கற்பக ராயனை முக்குறுணியானை
žரார் புலியூர்பதி மேலைவாசல் வாழ்
தேவர் சிறைமீட்ட சேவற்கொடியானை
-  சேவிக்க வேண்டும் அய்யா 

Sunday, 30 September 2012

கலைவாணி நின் கருணை தேன் மழையே

கலைவாணி நின் கருணை தேன் மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே
(கலைவாணி)
அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலையாவும் தந்தருள்வாய் கலைமாமணி
(கலைவாணி)
மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்
அருள் ஞானகரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்
ஸ்ருதியோடு லய பாவ ஸ்வரராக ஞானம்
சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்
(கலைவாணி)
வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்
வேணுவில் வரும் கானம் வாணி உன் சக்ரபாதம்
வானகம் வையகம் உன் புகழ் பாடும்
வேண்டினேன் உன்னைப் பாட தருவாய் சங்கீதம்
(கலைவாணி)