நந்தலாலா
|
|
[ ராகம் -- யதுகுல காம்போதி ] [ தாளம் -- ஆதி ]
|
|
காக்கைச் சிறகினிலே
நந்தலாலா -- நின்றன் கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா; |
|
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா -- நின்றன் பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா; |
|
கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா -- நின்றன் கீத மிசைக்குதடா நந்தலாலா; |
|
தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா -- நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா. |
No comments:
Post a Comment