Friday, 21 September 2012

வந்தாள் மகாலக்ஷ்மியே



வந்தாள் மகாலக்ஷ்மியே - என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
வந்தாள் மகாலக்ஷ்மியே - என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
(இது பெருமாள் பாடுவதாகவே கற்பனை செய்து கொள்ளுங்கள் - அவனையே ஆண்டவள் ஆண்டாள். அதனால் அவன் வீட்டில் அவள் ஆட்சி தான்! :-)

அடியேனின் குடி வாழ
தனம் வாழ - குடித்தனம் புக
வந்தாள் மகாலக்ஷ்மியே - என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
(இது பெரியாழ்வார் பாடுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய், ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய், அடியேனின் குடி வாழ= குடி வாழ வந்தவள் தானே!)

பக்தனின் வீட்டோடு தங்கி விட்டாள்
பண்டிகை நாள் பார்த்து (ஹாஹா) பொங்கலிட்டாள்
காமாட்சியோ மீனாட்சியோ
அபிராமியோ சிவகாமியோ
அம்பிகை இங்கொரு கன்னிகை என்றொரு
உருவம் எடுத்து
உலவி நடந்து
(வந்தாள் மகாலக்ஷ்மியே)
(பொங்கல் இட்டதை - நோன்பு நோற்றதாகவும் கொள்ளலாம் அல்லவா?
காமாட்சி, மீனாட்சி, அபிராமி, சிவகாமி - எல்லாரும் அலைமகளின் தோழிகள் தானே!)

நண்பா பெண்பாவை கண்வண்ணம்
கள்ளம் இல்லாத பூவண்ணம்
கண்டேன் சிங்காரக் கைவண்ணம்
தொட்டால் எல்லாமே பொன்வண்ணம்
பந்தம் சொந்தம் இல்லாமல்
வந்தது இங்கொரு வண்ணமயில்
வீடு வாசல் எல்லாமே
மின்னுது மின்னுது புன்னகையில்
மயங்கினேன்........... சபாஷ்.... ஆ ஆ ஆ ஆ
(ஸ்வரங்கள்.....)
(தொட்டால் எல்லாமே பொன்வண்ணம் = அவள் தொட்டுச் சூடிக் களைந்தது தானே, கண்ணனுக்குப் பொன்மாலையைக் காட்டிலும் பெரிது?)

என்வழி நேராக ஆக்கி வைத்தாள்
என்னையும் சீராக மாற்றி வைத்தாள்
தெய்வீகமே பெண் ஆனதோ
நான் காணவே தேர் வந்ததோ
மங்களம் பொங்கிடும்
மந்திரப் புன்னகை
இதழில் வடிய
இனிமை விளைய
(வந்தாள் மகாலக்ஷ்மியே)

( தெய்வீகமே பெண் ஆனதோ = இது உண்மை தானே?
என்வழி நேராக ஆக்கி வைத்தாள் = மற்றை நம் காமங்கள் களைந்து, நேரான வழியாக ஆக்கி வைத்தாள்!
என்னையும் சீராக மாற்றி வைத்தாள் = நோன்பினால், தான் மட்டுமன்றி, நோற்ற பெண்கள் அனைவரையும் அவனுக்குச் சீராக அல்லவோ ஆக்கி வைத்தாள்! சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!

No comments:

Post a Comment