Friday 21 September 2012

பச்சை மா மலை போல் மேனி



பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே.
                                                                
ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி
காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்கமாநகருளானே
கங்கையில் புனிதமாய காவேரி நடுவுபட்டு
பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டு
எங்ஙனம் மறந்து வாழ்வேன் ஏழையேன் ஏழையேனே

6 comments:

  1. TMS அவர்களின் குரலில் இப்பாடல் கேட்கும் பொழுது தேனாய் இனிக்கிறது.

    ReplyDelete
  2. திருவரங்கனுக்கு மகிழ்வூட்டும் பாசுரம் இது.

    ReplyDelete
  3. அரங்கமாநகருளானை இதய அரங்கததிரலே நறுத்தும் பாடல்லவா; அருமை ! ஓம் நமசிவாய!

    ReplyDelete
  4. என்றும் வாழும் வரிகள் இவை.

    ReplyDelete
  5. எங்கள் மால் இறைவன் ஈசன்...
    சிவ சிவ

    ReplyDelete